எமது பாடசாலையின் பான்ட் அணியின் சீருடையானது பழுதடைந்த நிலையில் காணப்பட்டமையால் புதிய சீருடையின் தேவையினை உணர்ந்த பிரதி அதிபர் அவர்கள் எமது சங்கத்திடம் சீருடை தொடர்பான தேவையினை பெற்றுத்தருமாறு கோரியிருந்தார். அத் தேவை இந்துவின் முத்துக்களால் ரூபா 212500.00/= செலவில் எமது பாடசாலைக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நிதி உதவிகளையும் வேறு பற்பல உதவிகளையும் வழங்கிய இந்துவின் முத்துக்களுக்கு சங்கம் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி
20.03.2023
பழைய மாணவர் சங்கம்
யா/வட்டு இந்துக் கல்லூரி,சித்தன்கேணி