எமது கல்லூரியில் உள்ளக விளையாட்டுக்களில் ஒன்றான சதுரங்கத்திற்கான பயிற்சிகள் 05.05.2023 அன்று வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் காலை 11.30 மணிவரை இடம்பெற்றது. இப் பயிற்சியினை வழங்குவதற்கு வளவாளர் திரு பா.திவாரகன்
( School chess instructor-Fide National Arbiter- CFSL ) அவர்கள் வருகை தந்திருந்தார். கிட்டத்தட்ட 55 வரையான மாணவர்களுக்குத் தேவையான அடிப்படைகளை விளக்கியதுடன் செயன்முறை விளக்கப்பயிற்சிகளையும் சிறந்த முறையில் மாணவர்களை மிகவும் கவரும் வண்ணம் அளித்தார். எமது கோரிக்கையின் அடிப்படையில் பயிற்சியாளர் பா.திவாரகன் அவர்கள் தொண்டடிப்படையிலேயே இப் பயிற்சிகளை தொடர்ந்து வழங்க முன்வந்துள்ளார். அந்த வகையில் இந்துவின் முத்துக்களின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி
08.05.2023
பழைய மாணவர் சங்கம்
யா/வட்டு இந்துக் கல்லூரி,சித்தன்கேணி