06.10.2023 வெள்ளிக்கிழமை இன்றைய தினம் எமது கல்லூரியில் ஆசிரியர் தினத்தை உயர்தர மாணவர் மன்றம் ஒழுங்கு செய்திருந்தது. இதற்கான அனுசரணையினை எமது சங்கத்திடம் கோரி இருந்தனர். அவர்களின் கோரிக்கையினை கருத்தில் கொண்டு சிறுவர் தினத்தை முன்னிட்டும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டும் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் மதிய உணவு விருந்தினை அளிப்பதற்கு எமது பழைய மாணவர் சங்க நிர்வாகம் தீர்மானித்தது. அந்த வகையில் இந்துவின் முத்துக்கள் பலரின் சரீர உதவியுடன் எமது கல்லூரியில் பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையில் மதிய விருந்து அளிக்கப்பட்டது.
மேற்படி செயல்பாட்டினை எமது பழைய மாணவர் சங்கத்தின் உப தலைவர் இந்துவின் முத்து செ.மயூரதன் அவர்கள் நெறிப்படுத்தியிருந்தார். அவருக்கு உதவியாக எமது கல்லூரியின் கல்வி சாரா ஊழியர்கள், சாரணர்களின் பொறுப்பாசிரியர் இந்துவின் முத்து கோணேசன், பழைய மாணவர்கள், உயர்தரமானவர்கள் இரவுபகலாக செயற்பட்டிருந்தனர். அந்த வகையில் அனைவருக்கும் எமது சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி
06.10.2023
பழைய மாணவர் சங்கம்
யா/வட்டு இந்த கல்லூரி, சித்தன்கேணி