09.05.2023 இன்று செவ்வாய்க்கிழமை 20வயதின் கீழ் பெண்கள் கரம் வலய மட்டத்தில் மூன்றாம் இடம்மற்றும் 18 வயதின் கீழ் ஆண்கள் பூப்பந்தாட்டம் வலய மட்டத்தில் 3ம் இடத்தினைப் பெற்றுள்ளனர். குறிப்பாக கரம் போட்டிக்குரிய மாணவிகளை இனம் காண்பதற்கும் பயிற்சிகள் வழங்கவும் எமது பழைய மாணவர் சங்கத்தின் கோரிக்கையின் பொருட்டு உதவிகள் புரிந்த உடற்கல்வி ஆசிரியர் பிரதீஸ்வரன் , ஆசிரியர் இந்துவின் முத்து இளங்கீரன் ஆசிரியர் இந்துவின் முத்து கயேந்திரன் ( மூவரும் ஆசிரியர்கள் - யா/ மூளாய் சைவப்பிரகாசா வித்தியாலயம் ) ஆகியோருக்கு எமது சங்கத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி
09.05.2023
பழைய மாணவர் சங்கம்
யா/வட்டு இந்துக் கல்லூரி, சித்தன்கேணி