22.04.2023 இன்றைய தினம் எமது கல்லூரியில் க.பொ.த (சா/த) 2022 (2023) மாணவர்களுக்கு பிரதான பாடங்களாகிய ஆங்கில பாடத்திற்கான கற்றல் செயலமர்வு ஒன்று இடம்பெற்றது. இதற்கு இந்துவின் முத்துக்கள் 2001 க.பொ.த உயர்தர கணித விஞ்ஞான பிரிவினர் கற்பித்தல் செயலமர்விற்கான வளவாளர் ஒழுங்கமைப்பினையும் கொடுப்பனவையும் பரிசுப் பொருட்களையும் பொறுப்பேற்றனர். கவர்ச்சிகரமான வகையில் செயலமர்வினை திருமதி டிலக்சி நிறோசன் (யா/உடுவில் மகளீர் கல்லூரி ) அவர்கள் முன்னெடுத்து வளவாளராக செயற்பட்டார். இதற்கான ஏற்பாட்டாளர்களாக
பழையமாணவர் சங்கம்
யா/வட்டு இந்துக் கல்லூரி,சித்தன்கேணி
காணப்படுகின்றனர். அந்த வகையில் இந்துவின் முத்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
நன்றி
22.04.2023
பழைய மாணவர் சங்கம்
யா/வட்டு இந்துக் கல்லூரி,சித்தன்கேணி