22.06.2023 இன்று வியாழக்கிழமை 20வயதின் கீழ் ஆண்கள் முதற் தடவையாக கபடி அணியினை உருவாக்கி கபடியில் வலய மட்டத்தில் இரண்டாம் இடத்தினைப் பெற்றுள்ளனர். அவ் வீரர்களுக்கு வாழ்த்துக்கள். குறிப்பாக கபடிக்குழுவிற்கு இரவு மற்றும் பகல் நேரப்பயிற்சிகளை வழங்கிய யா/தொல்புரம் விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் பயிற்றுவிப்பாளர் திரு வக்சன் அவர்களுக்கும் பயிற்சி வழங்க அனுமதி அளித்த அக் கல்லூரி அதிபர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் மேலும் இக்குழுவினை உருவாக்குவதற்கும் பயிற்சிகளை வழங்குவதற்கும் மனதார உதவிகளையும் அனுமதிகளையும் ஏனைய வசதிகளையும் வழங்கிய எமது கல்லூரியின் பிரதி அதிபர் வதனி தில்லைச்செல்வன் அவர்களுக்கும் உடற்கல்வி ஆசிரியருக்கும் ஏனைய உதவிகளை மேற்கொண்ட இந்துவின் முத்துக்களுக்கும் எமது பழைய மாணவர் சங்கத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
படம் - நட்பு ரீதியான பயிற்சியில் ஏற்கனவே எடுக்கப்பட்டதாகும்.
நன்றி
22.06.2023
பழைய மாணவர் சங்கம்
யா/வட்டு இந்துக் கல்லூரி, சித்தன்கேணி