VHC OCA LOGO

கணித பாடத்திற்கான கற்றல் செயலமர்வு

  • calendar icon Published on 02 Mar 2023
  • calendar icon Event Date: 18 Apr 2023

18.04.2023 இன்றைய தினம் எமது கல்லூரியில் க.பொ.த (சா/த) 2022 (2023) மாணவர்களுக்கு காலை 7.00 தொடக்கம் 01.00 மணி வரை பிரதான பாடங்களாகிய கணித பாடத்திற்கான கற்றல் செயலமர்வு ஒன்று இடம்பெற்றது. இதற்கு ஊவாவெல்லசப் பல்கலைக்கழகத்தின் அனுசரணையுடன் கையேடுகள் வழங்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் பிரயுமன், பிரதீஷ், சனோஜன் ஆகியவர்கள் கற்பித்தல் செயலமர்வை முன்னெடுக்க எமது இந்துவின்முத்து கந்தசொரூபன் நெறிப்படுத்தினார். மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சிறிய பரிசுப்பொருட்களும் வழங்கி மிகவும் கவர்ச்சிகரமான வகையில் செயலமர்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏற்பாட்டாளர்களாக

பழையமாணவர் சங்கம்

யா/வட்டு இந்துக் கல்லூரி,சித்தன்கேணி

காணப்படுகின்றனர். அந்த வகையில் இந்துவின் முத்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

நன்றி

18.04.2023

பழைய மாணவர் சங்கம்

யா/வட்டு இந்துக் கல்லூரி,சித்தன்கேணி