பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கற்றலில் இடர்படும் மாணவர்களுக்கான விசேட செயற்றிட்டம்
எமது பாடசாலையில் தரம் 06 தொடக்கம் தரம் 08 வரையுள்ள மாணவர்களில் தமிழ் மொழியை எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் இடர்பாடுகளை எதிர்கொள்ளும் மாணவர்கள் அதிபரினால் இனங் காணப்பட்டு இவர்களுக்கான செயற்றிட்டம் ஒன்றினை மேற்கொள்ள உதவுமாறு எமது சங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அக்கோரிக்கையினை ஏற்று எமது சங்கமானது விரைந்து செயற்பட்டது. 90 O/L அணியிடம் அக் கோரிக்கையினை முன்வைத்ததன் விளைவாக அண்மையில் கனடாவில் இருந்து வருகை தந்த இந்துவின் முத்து தே.அகிலன் ( 90 O/L அணி ) அவர்கள் இச்செயற்திட்டத்திற்கு ரூபா ஒருலட்சத்து இருபதாயிரம் வழங்க முன்வந்தார். இன்று 11.09.2023 திங்கட்கிழமை செயல்த்திட்டத்துடன் தொடர்புடைய இந்துவின் முத்துக்களுடன் அதிபர், ஆசிரியர், தெரிவு செய்யப்பட்ட மாணவர்களையும் இணைந்து சூம் கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டு செயற்றிட்டம் வைபவ ரீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கு உறுதுணையாக செயற்பட்ட பாடசாலை அதிபர் செ.மயூரதன், ம.முகுந்தன் ( 90 O/L அணி ) மற்றும் ஏனைய இந்துவின் முத்துக்கள் அனைவருக்கும் எமது சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்
நன்றி
11.09.2023
பழைய மாணவர் சங்கம்
யா/வட்டு இந்துக்கல்லூரி,சித்தன்கேணி