VHC OCA LOGO

கற்றலில் இடர்படும் மாணவர்களுக்கான விசேட செயற்றிட்டம்

  • calendar icon Published on 02 Mar 2023
  • calendar icon Event Date: 05 Oct 2023

பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கற்றலில் இடர்படும் மாணவர்களுக்கான விசேட செயற்றிட்டம் தொடர்பான மேற்பார்வை இன்று இடம் பெற்றது.

மேற்பார்வைச்செயற்பாட்டில் பாடசாலையின் அதிபர், மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் கலந்து மாணவர்கள் ஆசிரியருடன் கலந்துரையாடியதோடு மாணவர்களின் கற்றல் செயற்பாட்டினையும் ஆராய்ந்து ஊக்கப்படுத்தும் விதத்தில் ஆலோசனைகள் வழங்கப்பட்டு மேலதிக நடவடிக்கைகள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.

எமது பாடசாலையில் தரம் 06 தொடக்கம் தரம் 08 வரையான மாணவர்களுக்கான விசேட செயற்திட்டத்திற்கான தே.அகிலன் ( 90 O/L அணி ) அவர்கள் இச்செயற்திட்டத்திற்கான நிதியுதவியினை அளித்துள்ளமை ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட செய்தியாகும்.

இந்துவின் முத்துக்கள் அனைவருக்கும் எமது சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்

நன்றி

05.10.2023

பழைய மாணவர் சங்கம்

யா/வட்டு இந்துக்கல்லூரி,சித்தன்கேணி