130 வது அகவையில் கால் பதிக்கும் எம் கல்லூரி அன்னை யா/வட்டு இந்து கல்லூரி,சித்தன்கேணி 💥💥💥பிச்சை எடுத்தும் கற்பன கல் 💥💥💥
💪09.10.1894 தொடக்கம் 9.10.2023 வரை💪
ஆங்கிலேயர் ஆதிக்கத்திற்குள் எம் தேசம் அடி பணிந்திருந்த வேளையில் சைவமும் தமிழும் அடக்கப்பட்டு ஆங்கிலமே ஆதிக்கம் பெற்றிருக்க நல்லை நகர் நாவலர் மரபிலே வந்துதித்த அம்பலவான நாவலரின் சிந்தையிலுருவாகி ஆயிரத்தெண்ணூற்றுத் தொன்னூற்று நான்கிலே பிரசவமான எம் கல்லூரி அன்னை காலங்கள் கடந்து தடைகள் பல தாண்டி படிமுறை வளர்ச்சியைக் கண்டு வலிகாமம் கல்வி வலயத்திலே இன்று தலை சிறந்த கல்லூரி அன்னையாய் நூற்றுமுப்பதாவது அகவையில் இன்று கால்பதிக்கும் எம் கல்லூரி அன்னையை இந்துவின் முத்துக்கள் நாம் வாழ்த்துவோம்.வளங்கள்பல பெற்று வாழ்க வென்று வாழி வாழி எம் கல்லூரித்தாயே நீ வாழி
🙏எமது கல்லூரி அன்னையின் இன்றைய வளர்ச்சி நிலைக்கு காலங் காலமாய் உழைத்திட்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.🙏
நன்றி
09.10.2023
பழைய மாணவர் சங்கம் யா/வட்டு இந்துக் கல்லூரி
இந்துவின் முத்துக்கள்🤝