இன்றைய தினம் 09.10.2023 திங்கட்கிழமை தரம் 11 மாணவர்களின் கணித பாட அடைவினை விருத்தி செய்யும் முகமாக செயற்திட்டம் ஒன்று பழைய மாணவர் சங்கத்தினால் யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் அனுசரணையில் ஒழுங்கு செய்யப்பட்டது. இச் செயலமர்வில் தரம் 11 சேர்ந்த 80 வரையான மாணவர்கள் பங்கு பற்றியதுடன் மாணவர்களைப் புள்ளிகளின் அடிப்படையில் நான்கு குழுக்களாக பிரித்து 31 முகிழ்நிலை ஆசிரியர்கள் இரண்டு விரிவுரையாளர்கள், உபபீடாதிபதி ஆகியோரின் வழிகாட்டலில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் தேசியகல்வியற் கல்லூரி சமுகத்தினருக்கான வாகன வசதி எமது சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டதுடன். மாணவர்களுக்கான கையேடுகளுக்கான செலவீனத்தையும் பழைய மாணவர் சங்கம் மேற்கொண்டிருந்தது.
இச்செயலமர்விற்கான பல்வேறு உதவிகளை ஒருங்கிணைத்த விரிவுரையாளர் அம்பிகைபாகன், விரிவுரையாளர் பரணி, இந்துவின் முத்து கணிதபாட ஆசிரியர் கோணேசன், சங்கத்தின் உபதலைவர் மயூரதன், பாடசாலைச்சமுகம் அனைவருக்கும் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.
நன்றி
09.10.2023
பழைய மாணவர் சங்கம்
யா/வட்டு இந்துக் கல்லூரி,சித்தன்கேணி