எமது கல்லூரியில் தரம் 06,07,09 ஆகிய வகுப்புகளை சேர்ந்த கற்றலில் இடர்படும் மாணவர்களுக்கான விசேட செயற்திட்டம் ஒன்று பழைய மாணவர் சங்கத்தினால் வாரத்தில் ஐந்து நாட்களும் பி.ப 12.30 தொடக்கம் பி.ப 2.00 மணிவரை இடம்பெறுகின்றமை அறிந்தவிடயம்.
ஐப்பசி மாசம் வாசிப்பு மாதம் என்ற தொணிப்பொருளில் சங்கானைப் பொது நூலகத்தில் இருந்து வருகை தந்த எமது இந்துவின் முத்துவும் சங்கானைப் பொது நூலக நூலகருமான திருமதி சுதாமதி அவர்கள் வருகை தந்து இம்மானவர்களின் வாசிப்பு அறிவினை மேம்படுத்தும் வகையில் ஊக்குவிப்புகளை மேற்கொண்டார்.
நன்றாக வாசிப்பினை மேற்கொண்ட மாணவர்களுக்கு பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட பரிசு பொருட்களையும் வழங்கி கௌரவித்ததோடு எமது சங்க உறுப்பினர் இந்துவின் முத்து ம.முகுந்தன் அவர்களும் இந்நிகழ்வில் நிகழ்வில் கலந்து சிறப்பித்தார். அந்த வகையில் இந்துவின் முத்துக்களுக்கு எமது சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி
11.10.2023
பழைய மாணவர் சங்கம்
யா/வட்டு இந்து கல்லூரி,சித்தன்கேணி