அகில இலங்கை பரத நாட்டியப்போட்டி 2023ல்
மாணவர்கள் தொகை 1001 க்கு மேற்பட்ட பாடசாலைகளுக்குள்
சிரேஷ்ட பிரிவில்
குழு 01 பெண்களுக்கான
தேயிலை கொழுந்து நடனத்தில்
தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தினை எமது கல்லூரி மாணவர்கள் பெற்றுள்ளனர். இன்றைய தினம் 13.12.2023 புதன்கிழமை மதியம் 12.30 மணிக்கு அம் மாணவர்களுக்கு கௌரவிப்பு ஒன்றினை பாடசாலை சமுகம் ஏற்பாடு செய்திருந்தது. அக் கௌரவிப்பில் பழைய மாணவர் சங்கமானது தமது பங்களிப்பாக அனைவருக்குமான நினைவுச் சுவட்டினை வழங்க உதவியினை மேற்கொண்டதுடன் பாடசாலைச் சமூகத்தின் வேண்டுகோளுக்கிணங்க பழைய மாணவர்சங்கத்தின் பிரதிநிதியாக இந்துவின் முத்து அருள் சிவானந்தன் அவர்கள் கலந்து வாழ்த்துக்களைத் தெரிவித்து நினைவுச்சுவட்டினையும் வழங்கி கௌரவித்தார்.
நன்றி
13.12.2023
பழைய மாணவர் சங்கம்
யா/வட்டு இந்துக் கல்லூரி, சித்தன்கேணி