🇮🇳 புத்தகங்கள் அன்பளிப்பு
👉எமது பாடசாலையில் உள்ள க.பொ.த உயர் தர மாணவர்கள் பொதுப்பரீட்சையில் பொதுஅறிவுப்பாடத்தில் சிறந்த பெறுபேறுகள் பெற வழிப்படுத்தும் நோக்கில் பழைய மாணவர் சங்கத்தினால் பொது உளச்சார்பு சம்மந்தமான மூன்று புத்தகங்கள் கல்லூரி அதிபரிடம் 08.12.2023 வெள்ளிக்கிழமை வள்ளியம்மை மண்டபத்தில் நடைபெற்ற காலைப்பிரார்த்தனையில் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது. சில மாணவர்களிடம் இப்பரீட்சை சம்மந்தமான தோல்விகள் ஏற்பட்டு பல்கலைக்கழக அனுமதியில் இடர்படுவதனை அவதானித்த பழைய மாணவர் சங்கம் இவ்வாறு ரூபா இரண்டாயிரம் ( 2000/= ) பெறுமதியான இப்புத்தகங்களை நூல்நிலையம் மூலமாக மாணவர்கள் பெற்று பயில்வதற்கு வசதியினை ஏற்படுத்தியுள்ளது.
🤝
நன்றி
08.12.2023
பழைய மாணவர் சங்கம்
யா/வட்டு இந்துக் கல்லூரி, சித்தன்கேணி