பாடசாலையின் தேவைகளில் ஒன்றாக மாணவர்களின் இணைப்பாடவிதான செயற்பாடுகளின் போது அணிவதற்கான கோற் தேவை என பழையமாணவர் சங்கம் லண்டன் கிளையிடம் கோரிக்கை விடப்பட்டது. அக்கோரிக்கையினை நிறைவேற்றும் பணி எமது தாய்ச்சங்கத்திற்கு வழங்கப்பட்டது. அச் செயற்றிட்டத்திற்கான நன்கொடை ரூபா முப்பத்துநான்காயிரத்து ஐந்நூற்றுஐம்மத்தைந்து ரூபா இருபத்தொம்பது சதம் ( 34555.29/= ) இந்துவின் முத்து எஸ்.ரமேஸ்வரன் மூலம் எமக்கு கிடைக்கப்பெற்றமையை ஏற்கனவே தெரிவித்திருந்தோம். அந்த வகையில் ரூபா பதினைந்தாயிரம் (15000/=) பெறுமதியான இரண்டு கோற்கள் உத்தியோக பூர்வமாக பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது. அந்த வகையில் இந் நிதியுதவியினை வழங்கிய இந்துவின் முத்து எஸ்.ரமேஸ்வரன் அவர்களுக்கும் இதனை செயற்படுத்த இணைப்பினை ஏற்படுத்திய லண்டன் கிளையினருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
நன்றி
16.11.2023
பழைய மாணவர் சங்கம்
யா/வட்டு இந்துக் கல்லூரி,சித்தன்கேணி