இன்றைய தினம் 17.11.2023 வெள்ளிக்கிழமை மு.ப 8.30 தொடக்கம் பி.ப 1.30 வரை தரம் 11 மாணவர்களின் கணித பாட அடைவினை விருத்தி செய்யும் முகமாக செயற்திட்டம் ஒன்று பழைய மாணவர் சங்கத்தின் அனுசரனையில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியினால் செயற்படுத்தப்பட்டது. இச் செயலமர்வில் தரம் 11 சேர்ந்த அனைத்து மாணவர்களும் பங்கு பற்றியதுடன் மாணவர்களைப் புள்ளிகளின் அடிப்படையில் குழுக்களாக பிரித்து 32 முகிழ்நிலை ஆசிரியர்கள் இரண்டு விரிவுரையாளர்கள், பீடாதிபதி ஆகியோரின் நேரடியான வழிகாட்டலில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் தேசியகல்வியற் கல்லூரி சமுகத்தினருக்கான வாகன வசதிக்கான எரிபொருள் வசதி எமது சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டதுடன். மாணவர்களுக்கான கையேடுகளுக்கான செலவீனம், மற்றும் முகிழ்நிலை ஆசிரியர்களுக்கான தேநீர், சிற்றுண்டி ஒழுங்குகளையும் பழைய மாணவர் சங்கம் மேற்கொண்டிருந்தது.
இச்செயலமர்வினை ஒருங்கிணைத்த விரிவுரையாளர் அம்பிகைபாகன், விரிவுரையாளர் பரணிதரன், இந்துவின் முத்து கணிதபாட ஆசிரியர் கோணேசன், எமது சங்கத்தின் உபதலைவர் செ.மயூரதன், பாடசாலைச்சமுகம் அனைவருக்கும் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.
நன்றி
17.11.2023
பழைய மாணவர் சங்கம்
யா/வட்டு இந்துக் கல்லூரி,சித்தன்கேணி