VHC OCA LOGO

க.பொ.த (உ/த) மாணவர்களுக்கான கருத்தரங்கு

  • calendar icon Published on 02 Mar 2023
  • calendar icon Event Date: 05 Dec 2023

🇮🇳🇮🇳🇮🇳 உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்கு🇮🇳🇮🇳🇮🇳

 04.12.2023 திங்கட்கிழமை, 05.12.2023 செவ்வாய்க்கிழமை ஆகிய நாட்களில் பழைய மாணவர் சங்கத்தின் வழிப்படுத்தலில் க.பொ.த உயர்தரம் - 2023 மாணவர்களுக்கான தமிழ் பாடத்திற்கான கருத்தரங்கு ஆரம்பிக்கப்பட்டு இரு நாட்களும் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 1.00 மணிவரை சிறப்பாக இடம்பெற்றது. கருத்தரங்கிற்கான பெறுமதி மிக்க கையேடுகளும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக வழங்கப்படமை குறிப்பிடத்தக்கது. தமிழ் பாடத்திற்கான வளவாளராக திரு ம.தவரூபன் அவர்கள் இரு நாட்களும் பங்குபற்றியிருந்தார். எமது பாடசாலையில் தமிழ்ப்பாடத்தினை கல்விகற்கும் 37 மாணவர்கள் இச் செயலமர்வில் பங்குபற்றியிருந்தனர். கருத்தரங்கின் இறுதியில் மாணவர்களிடம் கருத்துக்களை எழுத்து வடிவில் கோரியிருந்தோம். மாணவர்களின் மனப்பூர்வமான நன்றிகளாலும், நல்ல பல கருத்துக்களாலும் பழைய மாணவர் சங்கத்தினரும் வளவாளர் ம.தவரூபன் ஆசிரியரும் அகம்மகிழ்ந்தனர்.

நன்றி

05.12.2023

பழைய மாணவர் சங்கம்

யா/வட்டு இந்துக் கல்லூரி, சித்தன்கேணி