🇮🇳🇮🇳🇮🇳 உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்கு🇮🇳🇮🇳🇮🇳
இன்று 08.12.2023 வெள்ளிக்கிழமை பழைய மாணவர் சங்கத்தின் வழிப்படுத்தலில் க.பொ.த உயர்தரம் - 2023 மாணவர்களுக்கான புவியியல் பாடத்திற்கான கருத்தரங்கு ஆரம்பிக்கப்பட்டு காலை 8.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணிவரை சிறப்பாக இடம்பெற்றது. மிகச்சிறந்த வளவாளர் திரு பி.எஸ்.வி .தினேஷ் B.A(Hons)Geo.Spl., Dip in GIS & RS, M.Phil in Geography அவர்களினால் நவீன கற்பித்தல் முறைகளை பயன்படுத்தி கருத்தரங்கு இடம்பெறுகிறது. எமது பாடசாலையில் புவியியல் பாடத்தினை கற்கும் 10 மாணவர்கள் இச் செயலமர்வில் பங்குபற்றியிருந்தனர். மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க புவியியல் பாட கருத்தரங்கு மேலுமொருநாள் நீடிக்கப்பட்டுள்ளது. திகதி பின்னர் அறிவிக்கப்படும் . இச் செயலமர்விற்குரிய கையேடுகள் பங்குபற்றிய மாணவர்களுக்கு இலவசமாக பழைய மாணவர் சங்கத்தினால் வழங்கப்பட்டது.
நன்றி
08.12.2023
பழைய மாணவர் சங்கம்
யா/வட்டு இந்துக் கல்லூரி, சித்தன்கேணி