VHC OCA LOGO

க.பொ.த (உ/த) மாணவர்களுக்கான கருத்தரங்கு

  • calendar icon Published on 02 Mar 2023
  • calendar icon Event Date: 29 Nov 2023

🇮🇳🇮🇳🇮🇳 உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்கு🇮🇳🇮🇳🇮🇳

இன்று 29.11.2023 புதன்கிழமையும் நேற்றைய தினமும் பழைய மாணவர் சங்கத்தின் வழிப்படுத்தலில் க.பொ.த உயர்தரம் - 2023 மாணவர்களுக்கான கருத்தரங்கு ஆரம்பிக்கப்பட்டு இன்று காலை 8.00 மணி தொடக்கம் மாலை 1.00 மணிவரை சிறப்பாக இடம்பெற்றது. வரலாறு பாடத்திற்கான வளவாளராக திரு யோ.பிரதீபன் BA (Hons) History.Spl, MA அவர்கள் பங்குபற்றியிருந்தார். பல மாதங்களாக வரலாறு பாடத்திற்கான ஆசிரியர் இன்மையினால் இம் மாணவர்கள் கற்றல் கற்பித்தலில் சிரமப்பட்டமையினால் மேலும் ஒரு நாளுக்கு கருத்தரங்கை நீடிக்குமாறு குறித்த மாணவர்களால் பழைய மாணவர் சங்கத்திற்கு கோரிக்கை விடப்பட்டது. அதனை கருத்தில் எடுத்துக்கொண்ட நிர்வாகம் மேலும் ஒரு நாளாக நாளை 30.11.2023 வியாழக்கிழமையும் வரலாறுபாட செயலமர்வினை நடாத்த ஏற்பாடு செய்துள்ளது.

நன்றி

29.11.2023

பழைய மாணவர் சங்கம்

யா/வட்டு இந்துக் கல்லூரி, சித்தன்கேணி