🇮🇳🇮🇳🇮🇳 உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்கு🇮🇳🇮🇳🇮🇳
இன்று 07.12.2023 வியாழக்கிழமை பழைய மாணவர் சங்கத்தின் வழிப்படுத்தலில் க.பொ.த உயர்தரம் - 2023 மாணவர்களுக்கான புவியியல் பாடத்திற்கான கருத்தரங்கு ஆரம்பிக்கப்பட்டு காலை 8.00 மணி தொடக்கம் மாலை 1.00 மணிவரை சிறப்பாக இடம்பெற்றது. மிகச்சிறந்த வளவாளர் திரு பி.எஸ்.வி.தினேஷ் B.A(Hons)Geo.Spl., Dip in GIS & RS, M.Phil in Geography அவர்களினால் இன்றும் நாளையும் புவியியல் பாடத்திற்கான நாட்களாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மிகச்சிறந்த வளவாளர் ஒழுங்கு செய்யப்பட்டு நவீன கற்பித்தல் முறைகளை பயன்படுத்தி கருத்தரங்கு இடம்பெறுகிறது. எமது பாடசாலையில் புவியியல் பாடத்தினை கற்கும் 10 மாணவர்கள் இச் செயலமர்வில் பங்குபற்றியிருந்தனர். மாணவர்களின் அடைவுமட்டத்தினை அதிகரிக்கும் நோக்கத்தினை கருத்தில் கொண்டு பழையமாணவர் சங்கம் செயற்பட்டுள்ளது.
நன்றி
07.12.2023
பழைய மாணவர் சங்கம்
யா/வட்டு இந்துக் கல்லூரி, சித்தன்கேணி