இன்றைய தினம் 08.12.2023 வெள்ளிக்கிழமை எமது பாடசாலையில் வள்ளியம்மை மண்டபத்தில் காலைப்பிரார்த்தனை வேளையில் பழைய மாணவர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட பாடசாலை மட்ட சதுரங்கப் போட்டியில் ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற ஆண்கள் , பெண்கள் என இருபத்தியொரு போட்டியாளர்களுக்கு பழைய மாணவர் சங்கத்தால் பெறுமதி மிக்க பரிசில்கள் வழங்கப்பட்டது. இப்பரிசில்களினை அதிபர் மற்றும் தற்போது பாடசாலையில் கடமையாற்றும் இந்துவின் முத்துக்களாக உள்ள ஆசிரியர்கள் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி
08.12.2023
பழைய மாணவர் சங்கம்
யா/வட்டு இந்துக் கல்லூரி, சித்தன்கேணி